தமிழகத்தில் கொரோனா காரணமாக ரயில் சேவைகள் அனைத்தும் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டன. அதன்பிறகு பாதித்து குறைந்ததை அடுத்து சில சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது அனைத்து ரயில்களும் வழக்கம்போல இயக்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு மதுரை -போடி இடையே மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி தொடங்கியது. இதையடுத்து இந்த பணி 2020 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது.
மதுரையில் இருந்து தேனி வரை பலமுறை ரயில் எஞ்சினை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதனுடன் 3 பெட்டிகளுடன் ரயில் இன்ஜின் இயக்கி சோதனை ஓட்டம் நடந்தது. அதன் பிறகு எப்போது மதுரை மற்றும் தேனி இடையே ரயில் சேவைகள் இயக்கப்படும் என்று பொதுமக்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில் இது குறித்து மகிழ்ச்சி அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி மதுரை -தேனி இடையே 12 வருடங்களுக்கு பிறகு இன்று (மே 27) முதல் ரயில் சேவைகள் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அந்த ரயில் மதுரையில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படும். தேனியில் இருந்து மதுரைக்கு மாலை 6.15 மணிக்கு புறப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்த ரயில் வடபழஞ்சி, உசிலம்பட்டி மற்றும் ஆண்டிபட்டி உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.