Categories
மாநில செய்திகள்

BREAKING: ஓமந்தூரார் தோட்டத்தில்…. கருணாநிதி சிலை நாளை திறப்பு….!!!!

சென்னை ஓமந்தூரார் தோட்ட அலுவலகத்தில் நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில் கருணாநிதி சிலையை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைக்கிறார். ஓமந்தூரார் தோட்டத்தில் ரூ.1.17 கோடி செலவில் சுமார் 16 அடி உயரத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு நாளை திறந்து வைக்க உள்ளார்.

இந்த விழாவில்முதல்வர்  மற்றும் தமிழக அமைச்சர்கள் உட்பட  பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அத்துடன் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி அரசு சார்பில் மலர் கண்காட்சி நடைபெற இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில்  ஜூன் 3 கருணாநிதி பிறந்தநாள் தினத்தில் வரலாற்றில் முதல் முறையாக அரசு சார்பில் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.

Categories

Tech |