பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 7ஆவது நாளாக சரிந்து வருவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது. இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது.
விலை நிர்ணயம் :
இதையடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 25 பைசா குறைந்து 76 ரூபாய் 19 காசுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே போல லிட்டர் டீசல் விலையியும் நேற்றைய விலையில் இருந்து 24 பைசா குறைந்து 70 ரூபாய் 09 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை 6ஆவது நாளாக அதிரடியாக குறைந்து வந்த நிலையில் நேற்று மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு இன்று மீண்டும் குறைந்துள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.