Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வால்பாறை ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு… “சோலையாறு அணையின் நீர்மட்டம் 70 அடி உயர்வு”…பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி…!!!!

வால்பாறை ஆறுகளின் தண்ணீர் அதிகமாக வருவதால் சோலையாறு அணையின் நீர்மட்டம் 70.23 அடியாக உயர்ந்துள்ளது.

கோவை மாவட்டம், வால்பாறையில் சோலையாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை 160 அடி கொள்ளளவில் அமைந்துள்ளது. கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் குறைந்து 60 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. இதன் காரணமாக மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வால்பாறை பகுதியில் மே மாதத்தில் கோடை மழை பெய்யும். ஆனால் இந்த வருடம் எதிர்பாராத விதமாக பருவநிலை மாற்றம் காரணமாக ஏப்ரல் மாதத்திலிருந்து கோடை மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது.

இதனால் வால்பாறை பகுதியில் இருக்கின்ற கூழாங்கல் ஆறு, நடுநிலை ஆறு, வெள்ளிமலை ஆறு ஆகிய ஆறுகளுக்கு தண்ணீர்  அதிகமாக வந்துள்ளது. இதன் காரணமாக சோலையார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் சோலையாறு அணையின் நீர்மட்டம் 70.23 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் அணைக்கு 272.11 கன அடியாக தண்ணீர் வருகிறது. ஓரிரு தினங்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இதனால் வால்பாறை பகுதியில் இந்த வருடம் அதிக அளவில் தென்மேற்கு பருவமழை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் ஆனந்தம் அடைந்தார்கள்.

Categories

Tech |