Categories
தேசிய செய்திகள்

வரும் 31 ஆம் தேதி மத்திய அரசு ஊழியர்களுக்கு…. DA 4 சதவீதம் உயர்வு?…. வெளியாகப்போகும் ஹேப்பி நியூஸ்….!!!!

7-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி வருடத்திற்கு இரண்டுமுறை திருத்தம் செய்யப்படுகிறது. இது ஆண்டின் முதன்முறையாக ஜனவரி மாதத்தில் உயரும். இதையடுத்து ஜூலையில் அதிகரிக்கும் என்பது கவனிக்கத்தக்கது. அந்த அடிப்படையில் 2022 ஆம் வருடத்துக்கான முதல் தவணை அகவிலைப்படி தொகை 34 சதவீதமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இப்போது நுகர்வோர் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அகவிலைப்படி கூடுதலாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த அகவிலைப்படி (DA) உயர்வுக்காக காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, இது பற்றிய முக்கியமான அறிவிப்பு வரும் மே 31 ஆம் தேதியன்று வெளியாகும் என்று தகவல்கள் கூறுகிறது.

அந்த வகையில் மே 31, 2022 அன்று அடுத்த தவணைக்கான அகவிலைப்படி தொகை எவ்வளவு அதிகரிக்கும் என மீண்டுமாக ஒருமுறை மதிப்பிடப்படும். அதன்படி மே 31-ல் ஏஐசிபிஐ குறியீட்டின் புது எண்கள் வரவுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இப்போதுவரை 34 சதவீதம் அகவிலைப்படி (DA) வழங்கப்படுகிறது. எனினும் அடுத்த அகவிலைப்படியில் கூடுதல் திருத்தம் செய்யப்பட இருப்பதாக தெரிகிறது. இதற்கு முன்பாக ஜனவரி மற்றும் பிப்ரவரியில் ஏஐசிபிஐ குறியீட்டில் சிறிது சரிவு ஏற்பட்டு 125.1 ஆக குறைக்கப்பட்டது. அதேநேரம் பிப்ரவரி மாதத்தில் 125 புள்ளிகளை எட்டிஇருந்தது. ஆனால் மார்ச் மாதத்தில் குறியீடு 1 புள்ளி அதிகரித்து 126 ஆக இருக்கிறது.

அத்துடன் ஏப்ரலில் வந்த ஏஐசிபிஐ குறியீடு 1 சதவீதம் அதிகரித்தது. அதன்பின் அகவிலைப்படி அதிகரிப்பதற்கான அகில இந்திய நுகர்வோர் விலைக்குறியீட்டில் பணவீக்க எண்கள் மே 31 அன்று வர இருக்கின்றன. இவற்றில் ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்க எண்கள் புதுப்பிக்கப்படும். இந்த எண்ணிக்கையானது இதுவரை 126 ஆக இருக்கிறது. இப்போது அடுத்த அகவிலைப்படி உயர்வு 3 சதவீதம் வரை இருக்கலாம் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. அதேசமயத்தில் அடுத்த 3 மாதங்களில் குறியீடு இன்னும் ஏற்றம்காட்டினால் DA உயர்வானது 4 சதவீதமாகவும் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |