தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக வேலைவாய்ப்பு முகாம்கள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. அதனால் பெரும்பாலான இளைஞர்கள் வேலை இல்லாமல் தவித்து வந்தனர். இந்நிலையில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி மாவட்டம்தோறும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து மாவட்ட வேலைவாய்ப்பு மையம் இன்று (மே 27) மாபெரும் வேலை வாய்ப்பு முகாமினை அதன் அலுவலகத்தில் நடத்துகிறது. இங்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி முதல் அனைத்து பட்டதாரிகளுக்கும் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் காலை 10 மணி முதல் நடைபெறும் முகாமில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.