உக்ரேனில் மிகப்பெரிய உருக்கு உற்பத்தி நிறுவனமான “மெடின் வெஸ்ட்” நிறுவனத்திற்கு ரினாட் அக்மெடோவ் என்பவர் உரிமையாளர் ஆவார். இவருக்கு மரியுபோலி நகரத்தில் சொந்தமான எஃகு ஆலைகள், இல்லிச் ஸ்டீல் அண்ட் அயர்ன் ஒர்க்ஸ் ஆகியவை ரஷ்ய குண்டுவீச்சுத் தாக்குதலில் போது மோசமாக சேதமடைந்தது. இதுகுறித்து உக்ரேனிய செய்தி இணையதளத்தில் அவர் கூறியது, “அசோவ்ஸ்டல் உருக்கு ஆலை ரஷ்ய குண்டு வீச்சு மற்றும் ஷெல் தாக்குதலால் பெரும் சேதத்தை சந்தித்தது. மேலும் எஃகு ஆலைகள் மீது ரஷிய படைகள் குண்டு வீச்சினால் ஏற்பட்ட இழப்புகளின் மொத்த மதிப்பு 17 மில்லியன் டாலர் முதல் 20 பில்லியன் டாலர் வரை இருக்கும்.
இந்த நஷ்டமான இறுதி தொகை ரஷ்யாவுக்கு எதிரான வழக்கில் தான் தீர்மானிக்கப்படும். அதுமட்டுமில்லாமல் நாங்கள் நிச்சயமாக ரஷ்யா மீது வழக்கு தொடுப்போம் அதன் மூலம் அனைத்து இழப்புகள் மற்றும் இழந்த வணிகங்களுக்கு சரியான இழப்பீடு கோருவோம். மேலும் ரஷ்யாவுடன் போர் தொடங்கியதில் இருந்து நான் உக்ரேனில் தான் இருக்கிறேன். நாங்கள் எங்கள் சேதத்தையும், அதன் வெற்றியையும் உறுதியாக நம்புகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.