மூன்றாம் நபர் காப்பீட்டின் உயர்வால் இந்தியாவில் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களின் விலையும் அதிகரிக்கவுள்ளது.
இருசக்கர வாகனம், கார் மற்றும் அனைத்து விதமான வாகனங்களுக்கும் மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியம் தொகை ஜுன் 1 ம் தேதி முதல் உயர்த்தப்படுகிறது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் இதுகுறித்து விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் புதிய அறிவிப்பின்படி, 150சிசிக்கு மேல் உள்ள பைக்குகளுக்கு 15 சதவீதம் பிரீமியம் உயர்வு இருக்கும். அதேபோல், ஜூன் 1 முதல், 1000சிசி முதல் 1500சிசி வரையிலான தனியார் காருக்கு 6 சதவீதம் பிரீமியம் செலுத்த வேண்டும்.
இவற்றைத் தவிர புதிய தனியார் காருக்கான (Private Car) மூன்றாம் நபர் பிரீமியமாக 23 சதவீதம் கூடுதல் காப்பீட்டுக் கட்டணம் செலுத்த வேண்டும். இது 1000சிசி வரையிலான வாகனங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.