தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக போட்டித் தேர்வுகள் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் அனைத்து துறையில் இருந்து போட்டித் தேர்வுகள் அறிவிப்பு வெளியாகி வருகிறது. அதன்படி தமிழகத்தில் பி.எட் முடித்தவர்கள் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாகும். இதற்கான தேர்வு ஆசிரியர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. இந்நிலையில் 2022ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 மற்றும் தாள்-2 எழுவதற்கான அறிக்கை மார்ச் 7ஆம் தேதி வெளியானது. இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 16 முதல் ஏப்ரல் 26ம் தேதி வரை பெறப்பட்டது.
இதற்கிடையில் பி.எட் இறுதி ஆண்டு மற்றும் ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பு இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் Bonafide Certificate னை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் தகுதி தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.அதன்படி இந்த தேர்விற்கு 6.3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து TN TET தாள் 1 இல் தகுதி பெறுபவர்கள் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்க தகுதியானவர்கள் மற்றும் தாள் 2 இல் தேர்ச்சி பெற்றவர்கள் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆசிரியர் பணிக்கு தகுதி உடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று வரை தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் சில வட்டாரங்கள் வருகின்ற ஜூலை மாதம் இறுதிக்குள் தேர்வு நடைபெறும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரி தேர்வுகள் முடிந்ததும் ஜூலை இறுதியில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.