Categories
தேசிய செய்திகள்

அடுத்த 5 நாட்கள் இப்படித்தான்…. இங்கே டூர் போறவங்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் அரபிக்கடல், மாலத்தீவுகள் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளை பருவமழை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மேற்குத்தொடர்ச்சி மலை ஒட்டிய இடுக்கி, வயநாடு, பத்தனம்திட்டா, பாலக்காடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |