தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இவர் எதற்கும் துணிந்தவன் படத்தின் வெற்றிக்கு பிறகு பாலா இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடத்தி வருகிறார். இந்த கூட்டணியில் பிதாமகன், நந்தா படங்கள் வெளியாகி அதிக வரவேற்பு பெற்றது. தற்போது இவர்கள் மீண்டும் இணைந்ததால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இப்படத்திற்கு தற்காலிமாக ‘சூர்யா 41’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் கதாநாயகி கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஜீவி பிரகாஷ் இசை அமைத்து 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படப்பிடிப்பு சமீபத்தில் கன்னியாகுமரியில் முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் சூர்யாவிற்கு பாலாவிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டு படப்பிடிப்பு தளத்தில் சூர்யா விலகியதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது என்று தகவல்கள் சமூகவலைதளத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் சூர்யா இப்படம் குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், மீண்டும் ‘சூர்யா 41’ படப்பிடிப்பிற்கு வர காத்திருக்கிறேன் என குறிப்பிட்டு, படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இவரின் இந்த பதிவால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.