செயலாளரை கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள வரிச்சியூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற செயலாளரான லஷ்மணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் லஷ்மணன் தச்சனேந்தல் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சில மர்ம நபர்கள் லஷ்மணனின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து அரிவாளை கொண்டு அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதில் படுகாயமடைந்த லஷ்மணனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே லஷ்மணன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.