Categories
மாநில செய்திகள்

சென்னை சென்ட்ரல்- தேனி எக்ஸ்பிரஸ்: பயணிகளுக்கு வெளியான செம ஹேப்பி நியூஸ்…!!!

மதுரை சந்திப்பு-தேனி மாவட்டம் போடி ரயில் நிலையம் இடையான 90 கிலோ மீட்டர் தூரத்திற்கு மீட்டர்கேஜ் பாதை அகற்றப்பட்டு அகல ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கி பல போராட்டங்களுக்கு பின்பு நிறைவடைந்தது. இந்நிலையில் நேற்று சென்னை வந்த பிரதமர் மோடி காணொலி மூலம் மதுரை-தேனி இடையே முன்பதிவு இல்லாத தினசரி சிறப்பு ரயில் சேவையை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் சென்னையிலிருந்து கனடா, மதுரையிலிருந்து மலேசியா, நாமக்கலிருந்து நியூயார்க் என்று பேசினார். அப்படிப்பட்ட நாமக்கல்லில் இருந்து சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் நிற்பதில்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்ட மக்கள் சென்னை சென்றுவர 10 ஆண்டுகாலமாக பெரிதும் பாலக்காடு- சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று மட்டுமே நம்பி இருக்கின்றனர். இந்த வண்டி பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், கரூர் வழியாக இயங்குவதால் நாமக்கல் மக்களுக்கு எளிதாக பயணச்சீட்டு கிடைப்பதில்லை.

இதனால் அடுத்த மாதம் முதல் இயக்கப்பட உள்ள சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் நாமக்கல்லில் நின்று சென்றால் நாமக்கல் பகுதி மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரவிந்திரநாத் எம்.பி., வாரத்துக்கு 3 நாட்கள் சென்னையில் இருந்து டெல்லிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறிய ரயில்வே அதிகாரிகள், சென்னை சென்ட்ரலில் இருந்து நாமக்கல் வழியாக வாரத்துக்கு 3 முறை மதுரை வரை இயக்கிக்கொண்டிருக்கும் சென்னை சென்ட்ரல்- மதுரை அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் தேனி வரை நீடிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மதுரை-தேனி புதிய ரயில் பாதையில் ஆண்டிபட்டி, உசிலம்பட்டி போன்ற சிறிய ஊர்களில் இந்த ரயில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். மேலும் சென்னை தேனி எக்ஸ்பிரஸ் ரயில் நாமக்கல் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாமக்கல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Categories

Tech |