Categories
தேசிய செய்திகள்

முட்டைகளை திருடும் இளம்பெண்…. பாய்ந்து தாக்கும் ஆண் மயில்… வைரலாகும் வீடியோ….!!!

நம் நாட்டின் தேசிய பறவையாக மயில் உள்ளது. மயில்கள் வயல்வெளி உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருகின்றன. இந்த மயில்கள் முட்டையிட்டு அடைகாத்து குஞ்சு பொரிப்பவை. அதனைத் தொடர்ந்து பெண்மயில் அடைகாக்கும் போது ஆண் மயில் இரை தேடிவிட்டு வரும். அது வந்தவுடன் பெண்மையில் இரைதேடச் செல்லும் அது வரும்வரை ஆண்மையில் முட்டைகளுக்கு பாதுகாப்பாக இருக்கும். மேலும் மனிதர்களுக்கு தொந்தரவு கொடுக்காத மயில்கள் தங்களுக்கு ஆபத்து வரும்போது ஆக்ரோஷம் அடைந்துவிடும். இந்நிலையில் மயிலின் முட்டைகளை திருட முயன்ற இளம்பெண் ஒருவரை ஆண்மையில் பாய்ந்து விரட்டும் காட்சிகள் வைரலாக பரவி வருகின்றன.

அதாவது பெண் மயில் இரை தேட சென்ற போது தொகையுடன் கூடிய ஆண் மயில் முட்டைகளின் மீது அமர்ந்து இருக்கிறது. அப்போது அந்த இளம்பெண் மயிலை பிடித்து தூக்கி வீசுகிறார். ஆனால் மயில் பறக்காமல் இறக்கைகளை படபடத்து விட்டு அங்கேயே நிற்கிறது. அந்த பெண் கீழே இருந்த முட்டைகளை ஒன்றாக தூக்கிப்போட்டு சேகரிக்கிறார். இதனை பார்த்த அந்த ஆண் மயில் பறந்து வந்து முட்டையை திருடும் பெண்ணின் மீது பாய்ந்து கீழே தள்ளுகிறது. இந்த காட்சி சமூக வளைதளத்தில் வைரலாகி லட்சக்கணக்க்கானவர்கள் லைக்குகளை குவித்து வருகிறது.

https://twitter.com/i/status/1528939349709967360

Categories

Tech |