தூத்துக்குடி மாநகராட்சியில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்த மின்கம்பங்களை மின் வாரிய அதிகாரிகள் வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.
தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு சாலை பணிகள் நடைபெற்று வருகின்றது. அதனடிப்படையில் கான்கிரீட் ஸ்மார்ட் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோடுகளில் சில இடங்களில் மின்கம்பங்கள் அகற்றாமல் சாலையின் நடுவில் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக நின்றது. இந்த மின் கம்பங்களை அகற்றும் பணி தற்சமயம் நடந்துள்ளது. அதனடிப்படையில் ஏற்கனவே சாலைகள் அமைத்து விட்டதால் மின்கம்பங்களை தோண்டி எடுக்க முடியவில்லை.
அதனால் இரும்பு மின்கம்பங்களை வெல்டிங் எந்திரம் மூலம் வெட்டி அகற்றி வருகிறார்கள். நேற்று முன்தினம் அண்ணாநகர் 12-வது தெருவில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்த இரண்டு மின்கம்பங்களை மின்வாரிய அதிகாரிகள் வெட்டி அப்புறப்படுத்தினார்கள். இதைபோன்று போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கின்ற அனைத்து மின் கம்பங்களை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.