Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“ஜிவி.பிரகாஷ், கௌதம் மேனன் கூட்டணியில் புதிய படம்”…. வெளியான படத்தின் அப்டேட்….!!!!

ஜிவி பிரகாஷ், கௌதம் மேனன் இணையும் புதிய திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், கௌதம் மேனன் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாக்குகின்ற நிலையில் படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. ஜிவி பிரகாஷ் நடிப்பில் அண்மையில் வெளியான செல்பி திரைப்படத்தை மதிமாறன் இயக்கினார். இத்திரைப்படத்தில் கௌதம் மேனன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மீண்டும் ஜிவி பிரகாஷ் கௌதம் மேனன் கூட்டணி இணைந்து இருக்கிறது. இத்திரைப்படத்தை கே.வினோத் இயக்குகின்றார். மேலும் திரைப்படத்தை மெட்ராஸ் ஸ்டூடியோ மற்றும் அன்ஷூ பிரபாகர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை வெளியாக இருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது.

Categories

Tech |