Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொலை செய்யப்பட்ட 4 மாத குழந்தை…. இளம்பெண் சாவில் நீடிக்கும் மர்மம்…. போலீஸ் விசாரணை…!!

மர்மமான முறையில் தாய்-குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள விஜயகரிசல்குளம் கிராமத்தில் முத்து(28) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு முத்து அதே ஊரில் வசிக்கும் காயத்ரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதில் காயத்ரி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கோகுல் ரக்சன் என்ற 4 மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக முத்துவிற்கும் காயத்ரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் காயத்ரியும் நான்கு மாத குழந்தையும் வீட்டு மாடியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாய் மற்றும் குழந்தையின் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் காயத்ரியின் வயிற்றில் விஷம் இருந்ததால் அவர் இறந்தது உறுதியானது.

மேலும் 4 மாத குழந்தையான கோகுல் மூச்சுத்திணறி இறந்தது தெரியவந்தது. இதனால் தலையணையால் அமுக்கி குழந்தையை கொலை செய்து இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது முத்து தலைமறைவாக இருக்கிறார். அவர் பிடிபட்டால் மட்டுமே தாய்- குழந்தை சாவில் இருக்கும் மர்மம் விலகும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |