ஷேர் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டி அருகே தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் 12-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஒரு ஷேர் ஆட்டோவில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த ஆட்டோவை சுரேஷ் கிருஷ்ணன்(25) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கல்லூரி அருகே மாணவ- மாணவிகளை இறக்கிவிட சுரேஷ் ஆட்டோவை நிறுத்திய போது அவ்வழியாக வேகமாக வந்த லாரி ஆட்டோவின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சுரேஷ் மற்றும் 12 மாணவ- மாணவிகளை அருகில் உள்ளவர்கள் மீட்டு காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான தங்கவேல்(43) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.