லண்டன், இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 பேருக்கு குரங்கு காய்ச்சல் பரவியுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த குரங்கு காய்ச்சல் தொற்றானது கட்டுப்படுத்தி விடக்கூடிய வைரஸ் தான் என்று கூறுகின்றனர். இந்த குரங்கு காய்ச்சலால் ஓரினச்சேர்க்கையாளர்கள், இரு பாலின சேர்க்கையாளர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்று இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக சுகாதார அமைப்பின் பெருந்தொற்று, தொற்று நோய்கள் பிரிவின் இயக்குனர் சில்வி பிரையண்ட் கூறியதாவது, “எதிர்காலத்தில் இந்த குரங்கு காய்ச்சல் இன்னும் அதிக அளவு எண்ணிக்கையிலானவர்களை பாதிக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்று கூறுகின்றார்.