மிதுனம் ராசி அன்பர்களே…!
இது நீங்கள் யாருக்கு முக்கியமான வாக்குறுதியை கொடுக்கவே கூடாது.
இன்று நீங்கள் தொழில் மற்றும் வியாபாரம் சிரப்பதற்கு கூடுதலாக அளிப்பது சிறந்தது. கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். இன்று உங்களுக்கு லாபம் தாமதமாகவே வந்து சேரும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியே செல்ல நேரிடும். தயவுசெய்து விஷ பிராணிகளிடம் விலகி இருப்பது சிறந்தது. இன்று நீங்கள் இஷ்ட தெய்வ வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது.
இந்த தம்பதிகளுக்கு இடையில் மகிழ்ச்சி கூடும். இன்று பிள்ளைகளிடம் உங்களுக்கு கவனம் கூடும் அவர்கள் எவ்வாறு படிக்கிறார்கள் என்று கண்காணிப்பில். இன்று வழக்கு நிலுவையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் கூடும்.
இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. என்று நீங்கள் காரமான உணவு வகைகளை தவிர்ப்பது மிகவும் சிறந்தது. இன்று உங்களுக்கு தலை வலி மற்றும் உடல் வலி வர வாய்ப்பு உள்ளது. இன்று நீங்கள் எதிர்பாராத சில நபர்களிடம் சிக்கி கொள்ள வாய்ப்பு உள்ளது. அவர்கள் உங்களிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்வார்கள். நீங்கள் தர்ம சங்கடத்துக்கு ஆளாக நேரிடும். சண்டை நடக்க கூடிய இடத்தில் நீங்கள் தயவுசெய்து அமைதி காப்பது சிறந்தது. காதலில் உள்ளவர்களுக்கு காதல் இன்று கைக்கூடும் நாளாகவே இருக்கிறது.
அவ்வப்போது பழைய பிரச்சினைகளும் தலை தூக்கிவிடும். இன்று நீங்கள் பேச்சு கட்டுப்படுத்துவது மிகவும் சிறந்தது. மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடைகள் அணிவது மிகவும் சிறந்தது. இன்று சனி பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை கிழக்கு.
அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் இளம் நீலம் நிறம்.