Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி 2020: ஆம் ஆத்மி மக்களை தவறாக வழிநடத்துகிறது

அனைத்துத் துறைகளிலும் ஆம் ஆத்மி அரசு தோல்வியடைந்துவிட்டதால் மக்களிடையே பொய்யான தகவல்களை பரப்பிவருவதாக விஜய் கோயல் விமர்சித்துள்ளார்.

செய்தியாளரிடம் பேசிய பாஜக மாநிலங்களவை உறுப்பினர் விஜய் கோயல், “ஆம் ஆத்மி அரசு பொய் கூறிவருகிறது. கல்வி துறையை முன்னேற்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கூறுகிறது. இதுகுறஇத்து அறிந்துகொள்ள நான் முஸ்தபாபாத்திலுள்ள பள்ளிக்குச் சென்றேன். அவர்கள் கூறியதற்கு மாறாக அது மிக மோசமான நிலையில் இருந்தது.

அப்பள்ளியின் நிலைமையை கண்டாலே, ஆம் ஆத்மி கல்வியை முன்னேற்ற எடுத்துள்ள நடவடிக்கை குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்வார்கள். அடிப்படை வசதிகள் கூட இல்லாத அப்பள்ளியில் நான்காயிரம் மாணவர்கள் உள்ளனர். பள்ளியிலுள்ள வராந்தாவில் மாணவர்கள் படிப்பதை காணமுடிகிறது.

டெல்லி துணை முதலமைச்சரும் கல்வித் துறை அமைச்சருமான மனிஷ் சிசோடியாவுக்கு நான் சவால் விடுகிறேன். அப்பள்ளிக்கு சென்று ஆம் ஆத்மி அரசு கூறும் சாதனைகளை அவரால் நிரூபிக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், டெல்லியிலுள்ள 900 பள்ளிகளில் 600 பள்ளிகளில் முதல்வர் இல்லை என்றும் அவர் விமர்சித்தார்.

மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூரின் சர்சைக்குறிய பேச்சு குறித்து நமது நிருபர் எழுப்பிய கேள்விக்கு, விஜய் கோயல் நேரடியாக பதில் அளிக்காமல், “ஷாஹீன் பாக் போராட்டங்கள் எனக்கு வேதனையை தருகிறது. அங்குதான் தேசத்துக்கு எதிராக கருத்துக்கள் கூறப்பட்டது” என்றார்.

Categories

Tech |