உலகின் மிகவும் பழமையான மரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிலி நாட்டில் பெரிய தாத்தா என்று அழைக்கப்படுகின்ற நான்கு மீட்டர் தடிமன் தண்டு கொண்ட ஒரு பழங்கால மரம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மரத்தின் பெயர் பழமையான அலர்ஸ் மரம் ஆகும். இந்த மரம் 5,000 ஆண்டுகளுக்கும் மேலானதாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் ஒரு ஆய்வின் கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் பாரிஸில் உள்ள காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் ஆய்வகத்தின் விஞ்ஞானி டாக்டர் ஜொனாதன் பேரிச்சிவிச், இந்த மரத்தை சோதனை செய்தார். அப்போது அவர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “அலர்ஸ் மிலேனாரியோ என்று அழைக்கப்படும் படகோனியன் சைப்ரஸ் மரமானது தற்போது சுமார் 5,484 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று சோதனைகளின் முடிவுகள் தெரிவிக்கின்றது” என்று அவர் கூறியுள்ளார். மேலும் உலகின் மிகப்பழமையான மரம் இந்த அலர்ஸ் மரம் என்று ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ள நிலையில், தற்போது மரத்தைப் பாதுகாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.