Categories
உலக செய்திகள்

என்ன ஆச்சரியம்….! பூமிக்கு மிக அருகில்…. 47 ஆயிரம் கி.மீ. வேகத்தில்…. கடந்து சென்ற சிறுகோள்….!!

பூமியை மணிக்கு 47 ஆயிரம் கி.மீ. வேகத்தில் 2 கி.மீ. அகலமுள்ள சிறுகோள் ஒன்று கடந்து சென்றது. 

சூரிய குடும்பம் 460 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானபோது விடுபட்டு போன பெரிய அளவிலான கற்பாறைகள் சிறுகோள்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த சிறுகோள்களுக்கு வளிமண்டலம் கிடையாது. இது, ஏறக்குறைய பெருங்கற்களை போன்று காணப்படும். இதன் உருவங்களும் ஒன்றுக்கொன்று மாறுபடும். மேலும் சூரியனை நோக்கியும் அதன் அண்டத்திலும் சுற்றி கொண்டு உள்ளன.  பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான தொலைவை ஒப்பிடுகையில்,  1.3 மடங்கு குறைவான இடைவெளியில் சிறுகோள்கள் பூமியை  நெருங்கி  வருகின்றன. இதனால் இவை  ஆபத்து விளைவிக்க கூடியவை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான தொலைவு 9.3 கோடி மைல்கள் ஆகும். இந்த வகையில் 7335 என பெயரிடப்பட்ட சிறுகோள் ஒன்று பூமியை  கடந்து சென்றுள்ளது. இது அமெரிக்காவில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடம் போன்று 4 மடங்கு உருவில் பெரியது. இந்த ஆண்டில் பூமியை நெருங்கி பறந்து சென்ற மிக பெரிய சிறுகோளும் இதுவே ஆகும். இதனை தென்துருவ பகுதியில் உள்ள தொலைநோக்கி ஒன்றின் வழியே படம் பிடித்துள்ளனர். இது சூரியனை  பல ஆண்டுகளாக சுற்றி வருவதனால் இதனை அப்பல்லோ சிறுகோள் என்றும் அழைக்கின்றனர்.

இதனை அடுத்து வருகிற 29ந்தேதி அன்று பூமியை இந்த சிறுகோள் பூமியே நெருங்கி வரும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதன்பின்னர் வருகிற 2029ம் ஆண்டு செப்டம்பரில் பூமியை நெருங்கி கடந்து செல்லும் என்றும் கூடுதலாக 2055 மற்றும் 2062 ஆகிய ஆண்டுகளிலும் பூமியை நெருங்கியபடி இந்த சிறுகோள் செல்லும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். கடந்த முறை 1996ம் ஆண்டு இந்த சிறுகோள் பூமிக்கு மிக அருகே வந்து சென்றுள்ளது. அப்போது, 40 லட்சம் கி.மீ. தொலைவில் பூமியை கடந்து சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |