Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(மே 28) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காகஇன்று (மே 28) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம்:

11 கே.வி.கமுதி மின் பாதையில் இன்று மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், கமுதி பஸ் நிறுத்தம், கண்ணார்பட்டி, முத்துமாரி நகர் தர்கா ரோடு, ஆதி பராசக்தி நகர், வெள்ளைய தேவன் நகர், தலைவநாயக்கன்பட்டி, கீழராமநதி, மேலராமநதி, காவடிப்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி மின் வினியோகம் இருக்காது.

தேனி மாவட்டம்:

ஆண்டிபட்டி பகுதியில்இன்று  மின்தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியத்தினா் தெரிவித்துள்ளனா். தமிழ்நாடு மின்சாரவாரிய பெரியகுளம் கோட்ட பராமரிப்பிலுள்ள ஆண்டிபட்டி உபமின்நிலையத்தில் மின்பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மதுரை – ஆண்டிபட்டி பிரதான சாலை, பேருந்து நிலைய பகுதிகள், ஸ்ரீநிவாசன் நகா், கொண்டமநாயக்கன்பட்டி, காமராஜா் நகா் பகதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளாா்

Categories

Tech |