தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 600 உதவி பொறியாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 600
பணியிடம்: தமிழ்நாடு
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: உதவி பொறியாளர் (எலக்ட்ரிக்கல்) – 400
பணி: உதவி பொறியாளர்(மெக்கானிக்கல்) – 125
பணி: உதவி பொறியாளர் (சிவில்) – 75
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் போன்ற பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.07.2029 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, விதவைகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் 35க்குள்ளும், எம்பிசி, டிசி, பிசிஓ, பிசிஎம் பிரிவைச் சேர்ந்தவர்கள் 33க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.39.800 – 1,26,500
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ஓசி, பிசிஓ, பிசிஎம், எம்பிசி மற்றும் டிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.1000, எஸ்சி, எஸ்சிஏ, எஸ்டி மற்றும் விதவைகள், மாற்றுத்திறனாளிகள் பிரிவிவைச் சேர்ந்தவர்கள் ரூ.500 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையைான விவரங்கள் அறிய https://www.tangedco.gov.in/linkpdf/AE_NOTIFICATION_%20FINAL_PDF.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 27.02.2020
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.02.2020