வடக்கில் இராணுவ வீரர்களுடன் சென்ற வாகனம் ஷியோக் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்தக் கோர விபத்தில் 7 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், பர்தார்பூரில் உள்ள தற்காலிக முகாமில் இருந்து எல்லை பாதுகாப்பு பணிக்கு 26 வீரர்களுடன் வாகனம் சென்று கொண்டிருந்தது.
இந்த வாகனம் காலை 9 மணியளவில் தோய்ஸ் பகுதியில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது சாலையிலிருந்து தடுமாறி ஆற்றில் தலைகுப்புற கவிழ்ந்தது. 50 அடி முதல் 60 அடி ஆழம் கொண்ட இந்த ஆற்றில் ராணுவ வாகனம் கவிழ்ந்ததில் 7 வீரர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மீதமுள்ள வீரர்கள் காயம் அடைந்த நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறியுள்ளார்.