Categories
தேசிய செய்திகள்

உங்ககிட்ட பான் கார்டு இருக்கா?…. இனி இதற்கெல்லாம் கட்டாயம்…. புதிய கட்டுப்பாடுகள் அமல்….!!!!

இந்தியாவில் தற்போது நிதி மோசடி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் வருமான வரித்துறை புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி பெரிய அளவிலான பண பரிவர்த்தனைகளை கண்காணிப்பதற்கும், நெறிமுறை படுத்தவும் புதிய விதிமுறை கடந்த மே 27ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி 20 லட்சத்திற்கும் மேல் பணம் பரிவர்த்தனை அவர்கள் கட்டாயம் தங்களது பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அதாவது ஒரு நிதி ஆண்டில் 20 லட்சம் ரூபாய் வரையில் மட்டுமே கட்டுப்பாடுகள் இல்லாமல் பரிவர்த்தனை செய்ய இயலும். அதனைத் தாண்டி பண பரிவர்த்தனை செய்தல் மற்றும் பான் கார்டு விவரங்களை வாடிக்கையாளர்கள் வழங்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் சார்ந்த பரிவர்த்தனைகளும் இது பொருந்தும் என அறிவித்துள்ளது.

வங்கி கணக்கு திறப்பதற்கு, டிமேட் கணக்கு திறப்பதற்கு, கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வாங்குவதற்கு பான் கார்டு அவசியம். மேலும் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் மியூச்சுவல் ஃபண்ட்,பத்திரங்களில் முதலீடு செய்தால் பான் கார்டு எண்ணை கட்டாயம் வழங்க வேண்டும். ஆயுள் காப்பீட்டு திட்டத்திற்கு பிரீமியம் செலுத்துவதற்கு ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் செலவிட்டால் பான் கார்டு கட்டாயம். இதுபோன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.

Categories

Tech |