Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில்….பொது கலந்தாய்வு முகாம்… 320 காவல்துறையினருக்கு பணியிட மாறுதல் …!!!!

பொது கலந்தாய்வு மூலம் 320 காவல்துறையினருக்கு பணியிட மாறுதல் முகாம் போலீஸ் சூப்பிரண்டு மோகன் தலைமையில் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் காவல்துறையினருக்கு பொது பணியிட மாறுதல் வருடம் தோறும் வழங்கப்படும். இதில் மூன்று வருடங்களாக ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர்களுக்கு வேறு காவல் நிலையங்களுக்கு பணியிட மாறுதல் உத்தரவை மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு வழங்குவார். இதற்குமுன் காவல்துறையினரிடமிருந்து அவர் செல்ல விரும்பும் காவல் நிலையங்கள் குறித்த விவரம் விண்ணப்பத்துடன் பெறப்படும். ஆனால் இந்த வருடம் பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு மூலம் வழங்கப்பட்டுள்ளது.

காவல் நிலையங்களில் 3 வருடங்களும் அதற்கு மேலாக பணிபுரிந்து வரும் முதல் நிலை, இரண்டாம் நிலை காவல்துறையினர், ஏட்டுகள், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பட்டியல் எடுக்கப்பட்டு அவர்கள் மட்டும் இந்த கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள். பொது கலந்தாய்வு முகாம் நேற்று ஈரோடு மாவட்டம் ஆனைக்கல் பாளையம் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது. காலை 8:00 மணிக்கு இந்த கலந்தாய்வு ஆரம்பித்தது. 3 பிரிவுகளாக நடத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன் தலைமையில் கலந்தாய்வு  நடைப்பெற்றது. பட்டியலில் உள்ளபடி காவல்துறையினர் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு அவர்கள் விரும்புகின்ற காவல்நிலையங்கள் எது என்று கேட்கப்பட்டுள்ளது.

இதையடுத்து போலீசார் காவல் நிலையங்களின் காலிப் பணியிடங்களை தெரிந்து கொள்கின்ற வகையில் பெரிய திரையில் காவல்நிலையங்கள் அங்குள்ள மொத்த பணியிடங்கள், காலி பணியிடங்கள் நிரப்பப்படுகின்ற காலிப்பணியிடங்கள் என வரிசையில் காவல்துறையினருக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து காவல்துறையினர் இடங்களை தேர்ந்தெடுத்து அவர்கள் கேட்கும் போது பணியிடம் அந்த காவல் நிலையத்தில் காலியாக இருந்தால் உடனடியாக அவர்களுக்கு மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரே காவல் துணை கோட்டத்தில் பணிபுரியும் ஒருவர் ஏற்கனவே பணியாற்றிய காவல் நிலையங்களை கேட்கக் கூடாது என்ற விதிமுறை இருந்தும்கூட உடல்நிலை பிரச்சினை, குடும்பத்தில் குழந்தைகள் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் விரும்பினால் அதை காவல் நிலையங்களில் தொடர்ந்து பணிபுரிய போலீஸ் சூப்பிரண்டு மோகன் அனுமதி கொடுத்தார். நேற்று சுமார் 300 காவல்துறையினர் இந்த கலந்தாய்வு வரவழைக்கப்பட்ட நிலையில் 320 பேர் பணியிடமாறுதல் பெற்றுள்ளனர்.

Categories

Tech |