Categories
மாநில செய்திகள்

“தன் மீது பொய் வழக்கு”…… உத்தரகாண்ட் முன்னாள் அமைச்சர் தற்கொலை…. பெரும் அதிர்ச்சி….!!!!!!

உத்தரகாண்ட் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பகுகுணா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநில முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பகுகுணாவின் மருமகள், தனது மகளை மாமனார் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் செய்திருந்தார். அதனால் ராஜேந்திர பகுகுணா மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் 59 வயதான ராஜேந்திர பகுகுணா தண்ணீர் தொட்டியின் மீது ஏறி தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பகுகுணா மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்த மூன்று நாட்களுக்கு பின் அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு பற்றி ராஜேந்திர பகுகுணா மிகவும் வருத்தத்தில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். அதனால் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் அவர் பலமுறை காவல் துறையின் அவசர எண்ணான 112இல் அழைத்து தற்கொலை செய்துகொள்ளும் திட்டத்தைப் பற்றி தெரிவித்திருக்கின்றார். இந்த நிலையில் போலீசார் அவரது வீட்டை அடைந்த நேரத்தில் பகுகுணா தண்ணீர் தொட்டியின் மீது ஏறி தன்னைத்தானே சுட்டுக் கொல்லப் போவதாக தெரிவித்திருக்கின்றார். இதனைத் தொடர்ந்து ஒலிபெருக்கியை பயன்படுத்தி எச்சரிக்கை செய்து போலீசார் தற்கொலை செய்து கொள்ள விடாமல் தடுக்க முயற்சி செய்தனர்.

ஆனால் தன் மீது பொய் வழக்கு போடப்பட்டதாக  திரும்பத்திரும்ப கூறிய ராஜேந்திர பகுகுணா திடீரென துப்பாக்கியை எடுத்து மார்பில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜேந்திர பகுகுணா உத்தரகாண்டில் 2004 – 2005 இல் என்.டி.திவாரி அரசில் இணை அமைச்சராக இருந்திருக்கிறார். தொழிற்சங்க தலைவரான இவர் ஹல்த்வானி டிப்போ பணிமனையில் பணிபுரிந்து கடந்த அக்டோபர் 31ஆம் தேதி ஓய்வு பெற்றுள்ளார்.

Categories

Tech |