Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஆப்ரேஷன் பண்ணி 8 மாதம்தான் ஆகுது” திடீரென தூக்கில் தொங்கிய திருநங்கை…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

திருநங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வஞ்சியம்மன் நகரில் லைலா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டில் அபர்ணா என்ற திருநங்கை வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அபர்ணா கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனால் அவருக்கு சில நாட்களாக வயிற்று வலி மற்றும் உடல் வலியும் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் அபர்ணாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் மன உளைச்சலில் இருந்த அபர்ணா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அபர்ணாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |