Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. சோலார் மின் இணைப்பு ரூ.3,00,000 மானியம் பெறுவது எப்படி…!!

விவசாயிகளுக்கு வேளாண்துறை மூலம் மானிய திட்டத்தில் விதைகள், உரங்கள், வேளாண் உபகரணங்கள், பண்ணைக்குட்டை அமைத்தல் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது மத்திய, மாநில, ஊரக வளர்ச்சி துறை இணைந்து தரிசு நிலங்களை சீரமைத்து விவசாய நிலங்களாக மாற்ற முயற்சியின் ஒரு பகுதியாக விவசாயத்திற்கு பயன்பட கூடிய வகையில் சோலார் மின் இணைப்பினை ஊக்குவிக்க தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு விவசாயும் வேளாண் துறையின் மூலம் அரசுகள் வழங்கும் மானியத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சோலார் மின் இணைப்புக்கு ரூ.5 லட்சம் செலவாகும். அதில் ரூ.3 லட்சம் மானியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ள ரூ.2 லட்சத்தை வங்கியில் கடனாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சோலார் மின்இணைப்பு மானியத்தை பெற விரும்பும் விவசாயிகள் புகைப்படம் 2, ஆதார் கார்டு, நிலத்தின் சிட்டா, நிலத்தின் பட்டா, நில வரைபடம், நில அடங்கல், கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் மற்றும் வாய்தா ரசீது ஆகியவற்றின் நகல் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு,

  • இந்த ஆவணங்களை டிவிசன் அலுவலகத்தில் கொண்டு சென்று பதிவு செய்ய வேண்டும்.
    விண்ணப்பதாரரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.
  • அதன் பின் சான்றிதழகள், உதவி மின் பொறியாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.
  • நிலத்தில் போர் இருந்தால் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடமிருந்து NOC வாங்கிக் கொள்ள வேண்டும்.
  • அதன் பின் ரூ.118 கொடுத்துப் பதிவு செய்ய வேண்டும். இப்பொழுது ஒப்புகைச் சீட்டுக் கொடுக்கப்படும்.
  • அதன் பிறகு தோட்டக்கலை அலுவலகத்திலிருந்து தகவல்கள் வரும்.

மேலும் விவசாயத்திற்கு என இலவச மின் இணைப்பு பெற்ற விவசாய நிலங்களுக்கு இந்த சோலார் மின் இணைப்பு வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விவசாயிகள் விண்ணப்பித்து பயன் பெறுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |