இங்கிலாந்தில் ஒரு பெண் 35 வயதிற்குள் பத்து கோடி ரூபாய் சேமித்த நிலையில் தன் பணியிலிருந்து விலகியிருக்கிறார்.
இங்கிலாந்தை சேர்ந்த கேட்டீ என்ற பெண் எப்போதும் ஆடம்பர செலவுகள் செய்வதை தவிர்த்து வந்துள்ளார். எனவே, தன் வருமானத்தில் அதிகமான பணத்தை சேமித்து வைத்திருக்கிறார். மேலும், தன் கணவருடன் சேர்ந்து செலவுகளை பெரும்பாலும் குறைத்து, முதலீடும் செய்து வந்திருக்கிறார்.
கேட்டீக்கு தற்போது 35 வயது ஆகிறது. இந்நிலையில், சுமார் 10 கோடி ரூபாய் சேமிப்பு மற்றும் முதலீடு பணமாக அவரிடம் இருக்கிறது. எனவே தான் பணியாற்றிக்கொண்டிருந்த நிறுவனத்திலிருந்து விலகிவிட்டார்.