Categories
மாநில செய்திகள்

“ஆன்லைனில் ரம்பம் ஆர்டர் செய்து”…. மனைவி, 2 பிள்ளைகளை கொன்ற ஐடி ஊழியர்…. அதிர்ச்சி பின்னணி…!!!!!!

சென்னையில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான பிரகாஷ் (வயது41). இவரின்  மனைவி காயத்ரி (39). இந்த தம்பதியினருக்கு நித்யஸ்ரீ (13) என்ற மகளும் ஹரிகிருஷ்ணன் (8) என்ற மகனும் இருக்கின்றனர். இவர்கள் வீட்டிற்கு இன்று காலை சென்ற பிரகாஷின் தந்தை வீட்டில் அனைவரும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சங்கர் நகர் போலீஸ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

முதல்கட்டமாக இந்த சம்பவ இடத்திலிருந்து கைரேகை பதிவு செய்து கைரேகை நிபுணர்களுக்கு தகவல் வழங்கப்பட்டு அவர்கள் வீட்டிற்குள் சோதனை செய்யப்பட்டிருக்கின்றது. அப்போது இறப்பதற்கு முன்னால் கடிதம் ஒன்றை அந்த குடும்பத்தினர் எழுதி வைத்திருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. அந்த கடிதத்தில் தங்களின் இந்த முடிவு குடும்பத்தோடு சேர்ந்து எடுத்த முடிவு என எழுதப்பட்டிருப்பதாக போலீசார்  தெரிவிக்கின்றனர். பிரகாஷ் வீட்டில் சுமார் 3.50 லட்சம் மதிப்பிலான கடன் பத்திரம் கிடைத்திருக்கின்றது. அதனால் அவர்கள் கடன் தொல்லையால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் முழு விவரம் விசாரணைக்கு பிறகே தெரியும் என தெரிவித்து இருக்கின்றனர். காவல்துறையினர் முதற்கட்ட தகவலில் தந்தை பிரகாஷ் தான் மற்ற மூவரையும் கொலை செய்துவிட்டு பின்னர் தானும் தற்கொலை செய்து இருக்கின்றார் என காவல்துறையினருக்கு தெரியவந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய காவலர் ஆணையர் ரவி கடந்த 19ம் தேதி பிரகாஷ் ஆன்லைனில் மின் ரம்பம் ஆர்டர் போட்டு வாங்கி இருப்பது தெரிய வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தற்கொலை கடிதத்தை வீட்டின் சுவற்றில் ஒட்டி வைத்து விட்டு தற்கொலை செய்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |