Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா?….. அனைத்து ஆட்சியாளர்களுக்கும் சுகாதாரத்துறை செயலர் பரபரப்பு கடிதம்….!!!

உலக நாடு முழுவதும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கொரோனா பரவல் பரவியது. இதனால் ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் இங்கிலாந்து, ஸ்பெயின், ஸ்வீடன், அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் குரங்கம்மை வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக விமான நிலையங்கள், முக்கிய துறைமுகங்கள் வழியாக வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை, அண்ணா நகர், பெருங்குடி, கோடம்பாக்கம் உள்ளிட்ட மண்டலங்களிலும் சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை கொரோனாவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்றாலும், இந்த நிலை தொடர்ந்தால் இணை நோய் உள்ளவர்கள் மற்றும் முதியவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். அனைத்து தொடர்ந்து தமிழகத்தில் இதுவரை 93.74% பேர் முதல் தவணை தடுப்பூசி, 82.55% இரண்டாவது தவணை செலுத்தி உள்ளனர். மேலும் 43 லட்சம் பேர் இன்னும் ஒரு டோஸ் கூட செலுத்தவில்லை.

எனவே தடுப்பூசி செலுத்தாதவர்களை தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று நாம் ஊக்குவிக்க வேண்டும். மேலும் தொற்றை கட்டுப்படுத்த தீவிரமாக செயல்படவில்லை என்றால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதுமட்டுமில்லாமல் பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிவது கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.  லேசான நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் கூட்டங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் கண்காணிப்பு பணிகளை ஆட்சியர் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |