மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா சாலையில் இருக்கும் மின்வாரிய அலுவலகத்தில் கட்டிட பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இங்கு கடந்த 2 வாரங்களாக மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சைபில் சைக் என்பவர் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சைபில் சைக்கை பார்ப்பதற்காக அவரது அண்ணன் குலாம் ரசல் என்பவர் மின்வாரிய அலுவலகத்தில் 10-வது மாடிக்கு சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக குலாம் ரசல் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்துவிட்டார். இதில் படுகாயமடைந்த குலாம் ரசல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.