மாடியிலிருந்து கீழே விழுந்து தனியார் நிறுவன அதிகாரி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள சாஸ்திரிநகர் எம்.ஜி சாலையில் சாமிநாதன்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் கண்ணாடி பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 25-ஆம் தேதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சாமிநாதனை அவரது குடும்பத்தினர் ஆழ்வார்பேட்டையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்ற பிறகு நேற்று முன்தினம் சாமிநாதன் வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் நேற்று மாடியில் இருந்து கீழே விழுந்து சாமிநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாமிநாதனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாமிநாதன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கால் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தாரா? என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.