Categories
மாநில செய்திகள்

BREAKING : “பெருமைமிகு முதலமைச்சர்களில் கலைஞரும் ஒருவர்”….. வெங்கையா நாயுடு புகழாரம்….!!!!

பெருமைமிகு முதலமைச்சர்களில் கலைஞரும் ஒருவர் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

இன்று தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற்று வருகின்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது: “இந்தியாவின் பெருமைமிகு முதலமைச்சர்களின் கலைஞரும் ஒருவர். என் இளம் வயதில் கலைஞரின் உரைகளால் ஈர்க்கப்பட்டு இருக்கிறேன். எங்களுக்கு கருத்து வேறுபாடு இருந்த போதிலும் தமது தரப்பு கருத்தை முன்வைப்பதில் கலைஞர் தனித் திறன் கொண்டவர். என்னுடைய பொதுவாழ்வில் கருணாநிதி உடனான உறவு மறக்கமுடியாத இனிமையானது. தமிழ் சினிமாவின் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைத்தவர் முதல்வர்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

Categories

Tech |