பதினோரு வருடங்களுக்கு பிறகு மதுரையில் இருந்து தேனிக்கு சென்ற ரயிலை மண்ணின் மைந்தன் இயக்கியுள்ளார்.
11 வருடங்களுக்குப் பிறகு மதுரை மாவட்டத்திலிருந்து தேனி மாவட்டத்திற்கு முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டதையடுத்து ஓட்டுனர் வெங்கடேஸ்வரன் இயக்கினார். இந்த பயணிகள் ரயிலை தேனி மண்ணின் மைந்தர் வெங்கடேஸ்வரன் இயக்கியது சிறப்புக்குரியதாக பார்க்கப்படுகின்றது. இந்த சிறப்பு வாய்ந்த ஒன்றைப் பார்ப்பதற்காக வெங்கடேஸ்வரனின் குடும்பத்தார் தேனி ரயில் நிலையத்திற்கு வந்து பார்த்தனர்.
சொந்த ஊரான தேனிக்கு ரயிலை இயக்கி வந்தது குறித்து வெங்கடேஸ்வரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, 15 வருடங்களாக ரயிலில் பைலட்டாக இருந்து ரயிலை இயக்கி வருகிறேன். தேனிக்கு ரயில் வருவது இந்த மாவட்டம் மக்களைப் போன்று எனக்கும் மகிழ்ச்சி அளிக்கின்றது. அந்த ரெயிலை இயக்க வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது. வரும் வழியெங்கும் மக்கள் உற்சாக வரவேற்பு தந்தது நெகிழ்ச்சியாக இருப்பதாக கூறியுள்ளார்.