தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டம் நம்பள்ளி மண்டல பகுதியில் தேர் விழா ஒன்று நடைபெற்றது. அப்போது திடீரென உயரே இருந்த மின்கம்பியில் உரசியதில் இந்த சம்பவத்தில் தேரின் மீது மின்சாரம் பாய்ந்து 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தேர் விபத்தில் உயிரிழந்தவர்கள் கெத்தபள்ளி கிராம பகுதியை சேர்ந்த ராஜாபைனா யாதய்யா (42), புகாகு மோனய்யா (43) ஆகிய மக்கபள்ளியை சேர்ந்த கார் ஓட்டுனர் தாசரி அன்ஜி ( 20) ஆகியோர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் இந்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அண்மைக்காலமாகவே கோவில் திருவிழாக்களில் மரணம் ஏற்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.