கோரக்பூரில் இருந்து ராஞ்சிக்கு சென்று கொண்டிருந்த ரயிலில் கடந்த 2010-ம் ஆண்டு கூர்க்காவாகா பணியாற்றிக் கொண்டிருந்த விஷ்ணு பிரசாத் என்பவர் பயணம் செய்தார். இந்த ரயில் ஒரு காட்டுப் பகுதியில் நின்றுள்ளது. அப்போது திடீரென 40 கொள்ளையர்கள் ரயிலில் ஏறியுள்ளனர். இந்தக் கொள்ளையர்கள் ரயிலில் இருந்த பயணிகளிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்த பணம், நகைகள் போன்றவற்றை வாங்கியுள்ளனர். உடனே விஷ்ணு பிரசாத்தும் தன்னிடம் இருந்த பணத்தை அந்த கொள்ளையர்களிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில் திடீரென அந்த கூட்டத்தில் இருந்த ஒரு கொள்ளையர் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்வதற்கு முயற்சி செய்துள்ளார்.
இதனால் கோபமடைந்த விஷ்ணு பிரசாத் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து 4 கொள்ளையர்களை சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டார். அதில் 8 கொள்ளையர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்து பயந்த மற்ற கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர். இந்த சண்டையில் விஷ்ணு பிரசாத் உடலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட அவர் பரிபூரணமாக குணமடைந்து விட்டார். மேலும் விஷ்ணு பிரசாத் குணம் அடைந்தவுடன் அவரை இந்திய ராணுவத்தில் ஒரு வீரராக பணியமர்த்தினர்.