தனுசு ராசி அன்பர்களே…!
இன்று உங்கள் அன்பு நண்பர்களின் ஆதரவு கிட்டும் நாளாக இருக்கிறது.
இழுபறியான வழக்குகள் இன்று உங்களுக்கு வெற்றி நிச்சயம். மனதை தளர விடாமல் இருப்பது நல்லது.இன்று உங்கள் நிதி நிலையை பற்றி பார்க்கும் பொழுது வருமானமும் உங்களுக்கு அதிகரித்து காணப்படும். இன்று நீங்கள் தடைகளை உடைத்தெறிந்து வெற்றியடைவீர்கள். தொழில் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இன்று கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுடன் இருப்பவர்களிடம் பேச்சை குறைத்துக் கொள்வது ரொம்ப நல்லது. எதையும் நீங்கள் எடுத்தெறிந்து பேச வேண்டாம்.
அலட்சியம் காட்டி எதையும் செய்ய வேண்டாம். முக்கியமான பணிகளை திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பொது வாழ்க்கையில் நீங்கள் உங்களை அர்ப்பணித்துக் கொள்வீர்கள். வாழ்க்கையின் நீங்கள் நல்ல விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
காரமான உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. இன்று நீங்கள் உங்கள் மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். ஒருவரை ஒருவர் மாற்றி குறைவுகள் எதுவும் சொல்லாமல் இருப்பது நல்லது. காதலில் உள்ளவர்களுக்கு காதல் இன்று கைகூடும். ஆனால் எச்சரிக்கை அவசியம் ஆகும். மாணவ கண்மணிகள் இன்றைய சூழ்நிலைகளில் புரிந்து செயல்பட வேண்டும். நீங்கள் கடின உழைப்பு செய்து வெற்றி பெறுவீர்கள். கல்வியில் அதிக கவனம் தேவை. மேற்கல்வியில் உள்ள மாணவர்களுக்கு கல்வியில் கவனம் தேவை. முக்கிய பணிகளை மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடைகள் அணிவது நல்லது.
இன்று நீங்கள் சித்தர் மற்றும் குரு பகவான் வழிபாடு மேற்கொள்வதால் நல்ல பலன் கிட்டும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு.
அதிர்ஷ்டமான எண் 4 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம் கரும் நீலம் மற்றும் சிவப்பு நிறம்.