Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: இந்தியாவிற்குள் நுழைந்த ஒமிக்ரான் துணை வகை….. மக்களே அலர்ட்…!!!!

மகாராஷ்டிராவில் முதல்முறையாக ஒமிக்ரானின் துணை வகை தொற்று பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 7 பேரில் இருவர் வெளிநாடு சென்று வந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. தொடர் ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளால் நாட்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் புனேவில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி ஒருங்கிணைப்புடன் நோயாளிகளுக்கு நடந்த பரிசோதனையில் மூன்று பெண்கள் உள்பட 7 பேருக்கு ஒமிக்ரானின் துணை வகை பாதிப்புகள் கண்டறியப் பட்டுள்ளன.

BA4 வகை தொற்றால் 4 பேரும், BA5 வகை தொற்றால் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய வகை ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 7 பேரில் 2 பேர் தென்னாப்பிரிக்கா, பெல்ஜியம் சென்று திரும்பியவர்கள் ஆவர். 3 பேர் கேரளா மற்றும் கர்நாடகாவுக்குப் பயணம் செய்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

Categories

Tech |