Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 6,7,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை போட்ட புதிய ப்ளான்….!!!!

தமிழகத்தில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்த நிலையில் கடந்த மே 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து ஜூன் 13ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ஆம் தேதியும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதற்கு பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

அதில் முதல்கட்டமாக காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் கல்வித்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பள்ளிக்கல்வித்துறை 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதத்தை திறம்பட கற்பிக்க அறிவியல் யாவும் கணிதம் என்ற புதிய திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.

அறிவியலையும், கணிதத்தையும் ஒரு குழந்தை சரியான முறையில் புரிந்து கொள்வதன் மூலம் அதன் கேள்வி கேட்கும் திறன் அதிகரிக்கும். அப்படி குழந்தைகளின் சிந்தனைகளை வளர்த்தெடுக்கும் திட்டம் இதுவாகும். இதுகுறித்த அறிவிப்பை மாணவர்கள் முழுமையாக தெரிந்துகொள்ள கணிதம் கற்று தரும் ஆசிரியர்கள் திட்டம் குறித்த படிநிலைகளை ஏமிஸ் இணையதளத்தில் தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |