திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வாஞ்சிபாளையம் ரயில் நிலையம் மேம்பாலம் அருகே அதே பகுதியில் வசித்து வரும் மீன் வியாபாரி காஜா, சதாம் உசேன் மற்றும் உதயகுமார் உள்ளிட்ட 4 பேர் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. அதில் ஆத்திரமடைந்த காஜா,உதயகுமார் மற்றும் அவருடைய நண்பர் உட்பட 3 பேரும் ஒன்றாக சேர்ந்த சதாம் உசேனைகடுமையாக தாக்கி கத்தி மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளனர்.
அதன்பிறகு தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பேரையும் போலீசார் வாகனத்தில் ஏற்றிக் கொண்ட காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது போலீஸ் விசாரணைக்கு பயந்து காஜா திடீரென தன் கையில் அணிந்திருந்த இரண்டு மோதிரங்களை கழற்றி விழுங்கி விட்டார். அதன் பிறகு சிறிது நேரத்தில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் விசாரணைக்கு பயந்து மோதிரத்தை விளங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.