Categories
மாநில செய்திகள்

சொத்து வரி கட்ட தவறினால் கட்டிடங்களுக்கு சீல்…. சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை….!!!!

சென்னையில் நீண்ட நாட்களாக சொத்து வரி செலுத்தாத வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து வரி கட்டாத 3 திருமண மண்டபங்கள், ஆறு ஹோட்டல்கள், 1 திரையரங்கம், 1 மருத்துவமனை, 4 வணிக வளாகங்கள் மற்றும் 107 வணிக அங்காடிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. 63பெரிய நிறுவனங்களின் கட்டிடங்கள் அதற்கு முன்பாக ஜப்தி அறிவிப்பு வைக்கப்படும் நிலுவை வரியை உடனடியாக செலுத்தும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நடவடிக்கையால் கடந்த 15 நாட்களில் 40 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |