Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முதல்… மீண்டும் பயணிகள் ரயில் சேவை….!!!!

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே இன்று முதல் மீண்டும் பயணிகள் ரயில் சேவை தொடங்குகின்றது. கொரோனா காரணமாக இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான பயணிகள் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நிறுத்தப்பட்டிருந்த இரயில் சேவை பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்தியா மற்றும் வங்கதேசம் இடையேயான பயணிகள் ரயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி டாக்காவில் இருந்து கொல்கத்தா -டாக்கா மைத்திரி எக்ஸ்பிரஸ் வங்கதேசம் ரயில்வே ரேக் மற்றும் கொல்கத்தா- குல்னா பந்தன் எக்ஸ்பிரஸ் கொல்கத்தாவிலிருந்து இந்திய ரயில்வே ரெக் மூலம் இன்று முதல் தொடங்கும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

Categories

Tech |