தமிழகத்தில் தொடர் மழை மற்றும் தக்காளி வரத்து குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை உயர்ந்து கொண்டே வந்தது. அதன் பிறகு தக்காளி விலையைக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தது. அதன்படி பண்ணை சந்தைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது. அதனால் இல்லத்தரசிகள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் தக்காளி விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயில் இருந்து 45 முதல் 50 ரூபாய் வரை குறைந்து விற்பனையாகி வந்தது.ஆனால் தற்போது தக்காளி வரத்தை மீண்டும் குறைந்துள்ளதால் என்று கிலோவுக்கு 15 ரூபாய் வரை உயர்ந்து 65 முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தக்காளி விலை உயர வாய்ப்புள்ளது என வியாபாரிகள் கூறியுள்ளதால் விலை 100 ரூபாயை தொட வாய்ப்புள்ளது.