அயோத்திக்கு சுற்றுலா சென்ற பேருந்து ஒன்று லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பேருந்து ஓட்டுநர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் கூறினர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அம்மாநில முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். படுகாயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.