Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

டாக்டர் வீட்டில்… கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை…. 67 பவுன் நகை, ரூ 3 லட்சம் மீட்பு…. 4 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!!!

மருத்துவர் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை அடித்த 4 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சாலை டாக்டர் தங்கவேல் வீதியில் வசித்து வருபவர் விஷ்ணு தீபக்(44). இவர் தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு சத்யா என்ற மனைவியும், யோக சந்திரன் என்ற மகனும் உள்ளார்கள். விஷ்ணு தீபக் தன்னுடைய மகனுக்கு மொட்டை போடுவதற்காக குடும்பத்துடன் கடந்த 22ஆம் தேதி விருத்தாச்சலத்திற்கு சென்று உள்ளார்கள். இதனை அடுத்து நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 67 பவுன் நகை ரூ 3,00,000 பணமும், அரை கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை திருடு போனது தெரிய வந்துள்ளது.

மேலும் போலீசாரின் கவனத்தை திசை திருப்பிகின்றவகையில் கொள்ளையர்கள் வீட்டிற்குள்ளே மிளகாய் பொடி தூவி இருந்தார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு அரசு மருத்துவமனை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை தெரிந்து கொண்டு மர்ம நபர்கள் கொள்ளையடித்தது தெரிய வந்துள்ளது . இதைத்தொடர்ந்து மருத்துவர் விஷ்ணு தீபக்கின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்பவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் மருத்துவரின் கிளினிக்கில் வேலை பார்க்கும் வசந்தகுமார் என்ற ஊழியர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் அவரை தேடியபோது அவர் சொந்த ஊரான கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபம் பகுதிக்கு சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து தனிப்படை காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று வசந்தகுமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். இதை பார்த்து காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடனே காவல்துறையினர் அவரிடம் கிடுபிடியாக  விசாரணை நடத்தினர். அப்போது வசந்தகுமார் டாக்டர் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து வசந்தகுமார் காவல்துறையினரிடம் தெரிவித்ததாவது, நான் மருத்துவர் விஷ்ணு தீபக்கின் தந்தை சந்திரன் நடத்திவரும் கிளினிக்கில் வேலை பார்த்து வந்துள்ளேன். இதனால் அடிக்கடி நான் மருத்துவர் வீட்டிற்கு சென்று வந்துள்ளேன். இதனால் அவருடைய குடும்பத்துடன் நெருங்கி பழகி உள்ளேன். அப்போது விஷ்ணு தீபக் வீட்டில் அதிக அளவில் நகை, பணம் இருப்பது எனக்கு தெரியவந்தது. எனவே அவற்றை கொள்ளையடிக்க திட்டம் போட்டு காத்திருந்தேன். அதன்படி கடந்த 22ஆம் தேதி மருத்துவர் குடும்பத்துடன் வெளியே சென்றதை பயன்படுத்திக் கொள்ளை அடிக்க முடிவு செய்து அதற்காக கோவை சுந்தராபுரம் பகுதியில் வசித்த எனது தம்பி 24 வயது அருண்குமார், நண்பர்கள் 26 வயதுடைய பிரவீன்குமார், 23 பிரித்விராஜ் ஆகியோரை அழைத்து வந்துள்ளேன்.

அவர்கள் அங்கிருந்து ஒரு கார் மூலம் ஈரோடிக்கு வந்தார்கள். அதன்பின் நாங்கள் நான்கு பேரும் சேர்ந்து மருத்துவர் வீட்டின் பின்பகுதியில் உள்ள சுவறு வழியாக ஏறி குதித்து வென்டிலேட்டரையை உடைத்து வீட்டிற்குள் சென்று பீரோவை திறந்து அதில் இருந்த லாக்கரை உடைத்து நகை, பணம், வெள்ளி பொருட்கள் அனைத்தையும் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டோம் என்று பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். இதையடுத்து காவல்துறையினர் நான்கு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 67 பவுன் நகை, மூன்று லட்சம் பணம், 1/4 கிலோ வெள்ளி பொருட்கள், கொள்ளை அடிப்பதற்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |