Categories
உலக செய்திகள்

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும்…. -பாகிஸ்தான் பிரதமர்…!!!

பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை  மீண்டும் அளிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

பாகிஸ்தான் நாட்டின் பிரதமரான ஷெபாஸ் ஷெரீப், பதவியேற்றவுடன் முதல் தடவையாக மக்களிடம் உரையாற்றி இருக்கிறார். அப்போது அவர், ஜம்மு காஷ்மீர் பிரச்சினையில் இந்திய நாட்டை கடும் விமர்சனம் செய்தார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக்கூடிய அரசியல் சாசன பிரிவு 370-ஐ சட்டவிரோதமாக இந்தியா ரத்து செய்திருக்கிறது என்றார்.

மேலும், ஆசியாவில் அமைதி நிலை ஏற்பட வேண்டுமெனில் இந்தியா, ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும். இந்திய அரசு மேற்கொண்ட பாரபட்சமான சட்டவிரோதமான தீர்மானத்தை ரத்து செய்வது அந்நாட்டின் பொறுப்பு என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |